வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்தது.;

Update: 2023-11-01 04:55 GMT

பைல் படம்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவை ஆகியவற்றின் விலையில் மாற்றம் ஏற்படும்.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 157.50 குறைந்தது. இதன் மூலம் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனையானது. .

இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்தது. நவம்பர் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன

அதன்படி வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 101.50 அதிகரித்தது. விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், இன்று ரூ.101.50 அதிகரித்தது.

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை,. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது.

Tags:    

Similar News