உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்: தாய் நாடு திரும்ப விருப்பம்

Update: 2022-03-12 15:51 GMT

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்- ஜான்சி லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டில் படித்து வந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், இந்திய ராணுவத்தில் சேர விரும்பிய சாய் நிகேஷ், போதிய உயரம் இல்லாததால் நிராரிக்கப்பட்டார். இதனால், உயர் கல்விக்காக உக்ரைன் சென்றிருந்தார். உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் விருப்பம் இருந்தால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என அந்தநாட்டு அரசு அறிவித்தது. அங்கு போர் ஏற்பட்டு அந்நாட்டு ராணுவத்தில் இணைய வாய்ப்பு வந்ததால், பின் விளைவுகளை அறியாமல் அவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். இந்த தகவலை அவர் கோவையில் வசிக்கும் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News