திமுக மேயர் வேட்பாளர்கள்: கோவை-கல்பனா; திருப்பூர்- தினேஷ்குமார்
திமுக மேயர் வேட்பாளர்களாக, கோவை-கல்பனா; திருப்பூர்- தினேஷ்குமார், ஈரோட்டில் நாகரத்தினம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மண்டல மாவட்டங்களில், மேயர் வேட்பாளர்களின் விவரங்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவை மேயராக, கல்பனா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயராக வெற்றிச் செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்களில் வெற்றிச் செல்வன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வார்டை சேர்ந்தவர்.
ஈரோடு மாநகராட்சி மேயராக, திருமதி. நாகரத்தினம், துணை மேயராக செல்வராஜ் ஆகியோர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மேயராக, 49வது வார்டு கவுன்சிலரான, வடக்கு மாநகர திமுக பொறுப்பாளர் தினேஷ்குமார் வேட்பாளராகி இருக்கிறார். துணை மேயர் பதவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கரூர் மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக, கவிதா கணேசன், துணை மேயராக, தாரணி பி. சரவணனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி
மேற்கு மண்டலத்தை பொருத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், கோவை மாவட்டம் காரமடை, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிகளில், நகராட்சி துணைத் தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி இருக்கிறது.