'போலாம் ரைட்' நிகழ்ச்சி: பஸ்சில் மாணவர்களுடன் பயணித்த கோவை கலெக்டர்

கோவையில், ‘போலாம் ரைட்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்களுடன் கலெக்டர் பயணம் செய்தார்.;

Update: 2022-03-19 07:45 GMT

அரசு பள்ளி மாணவர்களுடன் பயணம் செய்த கோவை கலெக்டர் சமீரன். 

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில். 'போலாம் ரைட்' என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், 5 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் 50 பேர் பங்கேற்றனர்.

மாணவ- மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். உயர்கல்வி படிக்க என்ன செய்ய வேண்டும் என்று, மாணவர்களுக்கு கலெக்டர் சமீரன் அறிவுரை கூறினார். பின்னர், தனியார் பஸ் மூலம் மாணவ- மாணவிகளுடன் இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பூச்சியியல் அருங்காட்சியகத்துக்கு பஸ்சில் சென்ற கலெக்டர், மாணவ மாணவிகளுக்கு பூச்சிகள், அவற்றின் தன்மை குறித்து விளக்கினார். தங்களுடன் கலெக்டர் பயணம் செய்ததால், அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News