அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலவர் ஸ்டாலின் திடீர் விசிட்
Tamil Nadu CM Stalin - டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
Tamil Nadu CM Stalin - கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் இரு கரைகளையும் தழுவியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வைகை, கல்லணை, மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவிரி டெல்டா கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்தபடி திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடமும் தொலைபேசியில் பேசினார். பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2