ஹெலிகாப்டர் விபத்து : குன்னூர் விரைகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அவசரப் பயணம் மேற்கொண்டு, நேரில் பாரவையிடுகிறார்.

Update: 2021-12-08 09:30 GMT
முதல்வர் ஸ்டாலின். 

நாட்டையே பரபரப்பாக்கி இருக்கும் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, நேரில் பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை குன்னூருக்கு செல்கிறார். 

இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருக்கு சாலை வழியாக குன்னூருக்கு செல்கிறார். அங்கு விபத்து மீட்புப் பணிகள்,  விபத்து மருத்துவ உதவிகள் குறித்து, முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக, சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 11, பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் மூவர் மீட்கப்பட வேண்டும் என்று, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து பகுதியில் 15, பேர் கொண்ட ராணுவக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News