மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்;
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (19.5.2022) மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார்.
அப்போது பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்து, பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் , பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கியும் மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடந்த 19.1.2022 அன்று கடிதம் அனுப்பியிருந்தார்.