முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீடு திரும்புகிறார்

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-07-17 04:22 GMT

முதல்வர் ஸ்டாலின் (பைல் படம்).

முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நாள் விழா நடைபெற உள்ள நிலையில் , இன்று முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Tags:    

Similar News