6 பேர் விடுதலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

Update: 2022-05-21 12:34 GMT

ஆறுபேர் விடுதலை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

உதகையில் காணொளி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

அப்போது  ஏனைய 6 பேரின் விடுதலைக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், இன்று 6 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

Tags:    

Similar News