ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்து: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
சுதந்திர தினத்தை ஒட்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசியல் அமைப்புக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
சுதந்திர தினத்தை ஒட்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் மற்றும் விசிக கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
இந்த தேநீர் விருந்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் கலந்து கொண்டார். அதே சமயம், இந்த விருந்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.