நகைக்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Update: 2021-09-13 07:13 GMT

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கி நகைக்கடன் குறித்து பேசினார்.

அப்போது, நகைக்கடனில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதனைக் கண்டறிந்து ஏழை எளிய தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.நகைக்கடன் தள்ளுபடியை ஏழை எளிய மக்களுக்கும் தகுதியான நபர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐந்து சவரனுக்கு உள்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய ஆறாயிரம் கோடி ரூபாய் செலவாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு மாத அளவு தமிழ்நாடு அரசு தீவிர ஆய்வு செய்து ஒரு குடும்பம் ஐந்து சவரன் நகைக்கடன் வைத்திருந்தால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 110 விதியின் கீழ் அது தள்ளுபடி செய்யப்படும்.

இதனால், தமிழ்நாடு அரசுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் செலவாகும். கூட்டுறவு நிறுவனத்துக்குத் தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு முறையாக செய்யும்.நகைக்கடனில் முறைகேடு செய்த கூட்டுறவு சங்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்கள் நவீன வசதிகளைக் கொண்டு கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News