முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
2 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்த முதல்வருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், . கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.