பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் ரூ.2113 கோடி செலவில் வகுப்பறை தங்கும் வசதிகள்

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.;

Update: 2021-12-03 14:47 GMT

தலைமை செயலகம் ( பைல் படம்)

"பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 14 தொடக்கப்பள்ளிகள், 11 நடுநிலைப்பள்ளிகள், 5 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.15 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகளும், 45 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் மொத்தம் ரூ.2113 கோடி செலவில் கட்டப்படும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 65 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1495.00 இலட்சம் ( பதினான்கு கோடியே தொண்ணூற்று ஐந்து இலட்சம் ) மற்றும் 34 உண்டி உறைவிட பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.614:16 இலட்சம் (ரூபாய் ஆறு கோடியே பதினான்கு இலட்சத்து பதினாறாயிரம் மட்டும்) ஆக மொத்தம் ரூ. 2109.16 இலட்சம் (ரூபாய் இருபத்தொரு கோடியே ஒன்பது இலட்சத்து பதினாறாயிரம் மட்டும்) செலவில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News