முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சலால் உடல் நலம் பாதிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சலால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-11-04 11:57 GMT

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் என காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல் அமைச்சராக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவருக்கு நேற்று திடீர் என காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஸ்டாலினுக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் இ.என்.டி. மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியுமான  மோகன் காமேஸ்வரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று திடீர் என காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் இருந்தன.  இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அவருக்கு வைரல் ப்ளூ காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே முதல்வர் ஸ்டாலின் காய்ச்சலுக்கான சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வில் இருக்கும் படியும் அறிவறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

காய்ச்சல் காரணமாக அடுத்த சில நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுவார். அவர் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News