பெரியார் நினைவு தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர்.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்;

Update: 2022-12-24 05:29 GMT

சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் ஈவெ ராமசாமி.

இவருடைய சுயமரியாதை கொள்கைகள் ,பகுத்தறிவு தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் ,தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. ஈவெ ராமசாமி, ஈவெரா, தந்தை பெரியார் ,வைக்கம் வீரர் என பல பட்டங்களால் அழைக்கப்படுபவர்

சாதிக் கொடுமை, தீண்டாமை , மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் பெரியார். சமுதாயத்தில் சாதி முறையையும், இழி நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கூறிய பெரியார், 1973ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24 ஆம் தேதி தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

பெரியார் மறைந்து கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் ஆனபிறகும் அவரின் கொள்கைகளும் ,அவரின் கோட்பாடுகளும், அவரின் முழக்கங்களும் இன்றளவும் தமிழகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள்! வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; மறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்! என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News