மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய முதல்வர் அறிவுறுத்தல்

மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என மதுரையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர்.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

Update: 2023-03-06 08:58 GMT

மதுரையில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு கூட்டம் நடத்தினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை,தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும். மாவட்டங்களுக்கு ஏற்ப சிறப்பு தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும். மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும். ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம் என்று கூறினார் 

Tags:    

Similar News