பெரியார் 48-வது நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்
பெரியார் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்;
தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் விடுதலைக்கான வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் 48-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.