ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்திய ஜனாதிபதி தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வாக்களித்தார்.

Update: 2022-07-18 06:04 GMT

இந்திய ஜனாதிபதி தேர்தலில்  சென்னையில் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக யஷ்வந்த்சின் காவும் போட்டியிடுகிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநிலங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநில முதல்வர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் மாநிலங்களில் இருந்தபடியே வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குக்குச்சாவடியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு. க. ஸ்டாலின் இதற்காக இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News