மகாகவி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2021-09-11 16:06 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு "மகாகவி நாள்"- ஐ முன்னிட்டு, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் அவர்களின் திருவருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,

இந்துசமய அரநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News