16 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்த முதல்வர்

16 நவீன நெல் சேமிப்பு தளங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலலின் இன்று திறந்து வைத்தார்.

Update: 2024-01-22 15:29 GMT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரூ.21.81 கோடி செலவிலான 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்து, 71 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய 71 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர வழங்கினார்.

விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகும் நெல்லைக் கொள்முதல் செய்து அரவைக்கு அனுப்புவதில் ஒரு நெல்மணி கூட வீணாகக்கூடாது என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்குச் செயல் வடிவம் கொடுத்திடும் வகையில், 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் பதினெட்டு இடங்களில் மொத்தம் 2,86,350 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மொத்தம் ரூ.238.07 கோடி மதிப்பீட்டில் நிறுவ ஆணையிடப்பட்டுப் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 190 சேமிப்பு தளங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 11.02.2023 மற்றும் 25.04.2023 ஆகிய நாட்களில் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.

கட்டிமுடிக்கப்பட்ட 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தல்

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம், எடமணல் கிராமத்தில் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் சாலை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள 16,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை  அவர் திறந்து வைத்தார்.

மழைக்காலங்களில் விவசாயிகளுடைய உழைப்பில் விளைந்த நெல்மணிகள் சேதமடையாமல் காத்திடும் வகையில் இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021-லிருந்து இதுநாள் வரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மொத்தம் 219.92 கோடி ரூபாய் செலவில் 2.75 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 206 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய 71 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக மூன்று நபர்களுக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பணியாளர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் வழங்கப்பட்ட ஒரு நாள் ஊதியமான ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வரிடம்  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  கோபால், தமிழ்நாடு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு தலைவர் ரங்கநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர்  அண்ணாதுரை,  தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News