மேல்மருவத்தூரில் இன்னுயிர் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

மேல்மருவத்தூரில், உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Update: 2021-12-18 15:02 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.12.2021) செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் நடைபெற்ற விழாவில், உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார். உடன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் க சந்தர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் சிறப்புப் பணி அலுவலர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குநர், ஆதிபராசக்தி அறக்கட்டளை துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News