ஒமிக்ரான் தடுப்பு, ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்தும், ஓமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இன்று (13.12.2021 தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைமை இயக்குநர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், பொதுத்துறை செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.