கிறிஸ்தவ திருமணப் பதிவு: தமிழக அரசு அதிரடி உத்தரவு

கிறிஸ்தவ திருமணப் பதிவு சான்று பெறுவதற்கு தமிழக அரசு புதிய வழிமுறையை அதிரடியாக அறிவித்துள்ளது.

Update: 2021-10-30 02:48 GMT

கிறிஸ்தவ  திருமணப் பதிவு சான்று குறித்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்தவ திருமணம் குறித்து பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட் டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்தவ திருமணப் பதிவு சான்று நகல்களை பெறுவதற்காக தமிழகம் முழுவதில் இருந்து தலை  நகரான சென்னைக்கு பொதுமக்கள் வரவேண்டிய நிலை இனிமேல் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் திருமண சான்று கோரும் மனுக்கள் அதிகளவில் உள்ளதால், திருமண சான்றின் நகலை பெறுவதற்கு தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மக்களுக்கு அதிக பொருட்செலவு மற்றும் நேரவியம் ஏற்படுகிறது.

இந்த கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, இந்திய கிறிஸ்தவ திருமண சான்று வழங்குவதற்காக டிஐஜி நிலையில் உள்ள பதிவுத்துறை தலைவரின் நேர்முக உதவியாளருக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை இணைய வழியிலான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திற்கான நகல்களை பொறுத்தமட்டில் அந்தந்த பதிவு மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கு பரவலாக்கப்படும்.

இதனால், அந்தந்த பதிவு மண்டலங்களில் கோரப்படும் இந்திய கிறிஸ்தவ திருமண உண்மை சான்றுகளை அந்தந்த மண்டல டிஐஜிக்களே வழங்கலாம். அதற்காக  புதிதாக மண்டலம் உருவாக்கப்படும். எனவே, அந்தந்த மண்டல டிஐஜிக்களுக்கும் இதே அதிகாரம் வழங்கலாம். இவ்வாறு அறிவித்து தமிழக கிறிஸ்வர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. 

இதனால், இனி கிறிஸ்தவர்கள் திருமண சான்று பெற தலைநகர் சென்னைக்கு அலையவேண்டியதில்லை.

Tags:    

Similar News