முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள்

மக்கள் ஜனாதிபதியாக கொண்டாடப்பட்ட ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் ஏழாவது ஆ்ண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.;

Update: 2022-07-27 07:30 GMT

டாக்டர் அப்துல் கலாம்.

துாக்கத்தில் வருவதல்ல கனவு; உங்களை துாங்க விடாமல் செய்வதே கனவு. ஒரு மனிதனின் பிறப்பு வேண்டுமானால், சாதாரண சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு என்பது, சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அமுத பொன்மொழிகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியாக, குடியரசு தலைவராக பதவி வகித்தும், எளிமையான மனிதராக வாழ்ந்த சாதனை நாயகன் அப்துல் கலாம். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 1931 அக்.,15ல், ஜைனுலாப்தீன் - ஆஷியம்மா தம்பதிக்கு மகனாக பிறந்த கலாம், குடும்ப வறுமையால், மாணவனாக படித்துக்கொண்டே, சிறுவயதிலேயே செய்திதாள் விற்பனை செய்தார். திருச்சி கல்லுாரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். சென்னை எம்.ஐ.டி., கல்லுாரியில் வான்வெளி பொறியியல் முதுகலை பட்டம் பெற்றார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், 1960ல், முதன்மை அறிவியலராக பணியில் சேர்ந்தார். சிறிய ராணுவ ஹெலிகாப்டரை வடிவமைத்து, உருவாக்கினார். 1969ல், இஸ்ரோவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை கோள் ஏவுகணை திட்ட இயக்குனராக பணிசெய்தார். லாஞ்சர் மூலம் ரோகிணி என்ற செயற்கைகோளையும், தொடர்ந்து அக்னி, பிரித்வி ஏவுகணைகளை செலுத்தி,. சாதனை நாயகனாக மாறினார்.

பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக, பணிசெய்தார். பொக்ரான் அணுகுண்டு வெடிப்பிலும், முக்கிய பங்காற்றினார். கலாம் ராஜ் ஸ்டெம், டேப்லெட் மருத்துவ கருவி தயாரிப்பிலும் சாதனை நிகழ்த்தினார்.

2002ல், இந்திய நாட்டின் ஜனாதிபதியான கலாம், மாணவ சமுதாயத்தின் அதிக அன்பும், அக்கறை காட்டி அவர்களள நேரடியாக சந்தித்து உரையாடினார். இதேே நாளில், 2015ல், மேகாலயா மாநிலத்தில், ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடும்போது, மயங்கி விழுந்து, 83வது வயதில் உயிரிழந்தார்.

இந்தியாவை வல்லரசாக்கும்  கனவை விதைத்த ஏவுகணை நாயகன் கலாம்; 'அக்னி சிறகுகள்' என்ற அவரது சுயசரிதை நுாலில், இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற அவரது கனவை, நாம் நனவாக்க வேண்டும். அதற்கான இலக்கை நோக்கி பயணிக்க, கலாமின் நினைவு நாளில் இன்று உறுதியேற்போம்.    

Tags:    

Similar News