பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2024-08-14 11:00 GMT

இருகூர் -கோவை வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளுக்கு வசதியாக, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி மாற்றுப்பாதையில் கீழ்க்கண்ட தேதிகளிலில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் ரயில் 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 30 & 31 ஆகஸ்ட், 2024 (10 நாட்கள்) இருகூர் – போதனூர் வழியாக இயக்கப்படும். மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்பதால் மேற்கூறிய தேதிகளில் சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஜே.என். ரயில் நிலையங்களில் நின்று செல்வது தவிர்க்கப்படும்.

இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News