கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் வருகிற 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.;

Update: 2022-05-11 07:35 GMT

தமிழகத்தில் கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வருகிற 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தை தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பூர் இடங்களில் தலா 5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஆந்திரா அருகே உருவாகியிருந்த அசானி புயல் வலுவிழந்து குறைந்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. மழை பெய்தால் தமிழகத்தில் வெப்பம் மேலும் குறைந்து இதமான சூழல் ஏற்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News