ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஆக. 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.;

Update: 2021-08-03 10:33 GMT

வெப்ப சலனம் காரணமாக நீலகிரி,கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் ஆக. 7 ம் தேதி முதல் தமிழக்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 5, 6 தினங்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 7 தேதி அன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று முதல் ஆக.7ம் தேதி வரை அரபிக் கடலின் தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News