தமிழகத்திற்கு மத்தியஅரசு விருது: முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் கீதாஜீவன்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுதில்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியததில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது, அதற்காக இந்திய குடியரசுத் தலைவரால் பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது.
அந்த விருதினை அமைச்சர் கீதாஜீவன் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். உடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர். லால்வேனா, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் ஜானிடாம் வர்கீஸ், ஆகியோர் உள்ளனர்.