காணொளி மூலம் இன்று நடைபெறும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Update: 2023-11-23 04:38 GMT

காவிரி ஆறு கோப்புப்படம் 

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை சுமூகமாக செய்து வருகின்றன. இதன்படி கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி, தமிழ்நாட்டுக்கு நவம்பர் 23ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகத்தை வலியுறுத்தியது.

ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடமுடியாது என பிடிவாதம் பிடிக்கவே, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 3ம் தேதி அவசரமாக கூடி, ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை செயல்படுத்த கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் செல்லுபடிகாலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு அடுத்துவரும் நாட்களுக்கான நீர் திறப்பை உறுதி செய்வது தொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட உள்ளது. அதன்படி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறுகிறது.

காவிரி ஆற்று நீரோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News