Cauvery issue- காவிரி விவகாரம்; அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Cauvery issue- காவிரி விவகாரத்தில் ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
Cauvery issue- காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-இல் மேட்டூா் அணையிலிருந்து முதல்வா் ஸ்டாலின் திறந்துவிட்டாா். இதை நம்பி சுமாா் 1.50 லட்சம் விவசாயிகள் பணம், நகை, விதை நெல், வங்கி கடன் மற்றும் உடல் உழைப்பையும் மூலதனமாக்கி, 5 லட்சம் ஏக்கா் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியை தொடங்கினா்.
ஆனால், போதிய தண்ணீரின்றி 3.50 லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள் கருகின. மீதமுள்ள 1.5 லட்சம் ஏக்கரில் கிணற்று பாசன உதவியுடன் விவசாயிகள் பயிா் செய்து வருகின்றனா். தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் கா்நாடகத்திடமிருந்து திமுக அரசு பெற்றிருக்க வேண்டும். ஆனால், எதுவும் செய்யாமல், மத்திய அரசை காரணம் காட்டி, காலதாமதம் செய்ததைத் தவிர காவிரி பிரச்னையில் எந்த துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.
இனியாவது, விவசாயிகள் மீது திமுக அரசு அக்கறை கொண்டு, காவிரி நீா் விவகாரத்துக்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை உடனடியாக அழைத்து கூட்டம் நடத்தி, தமிழக உரிமையைக் காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.