Tamil Nadu Governor Ravi speech- தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்; கவர்னர் ரவி வேதனை

Tamil Nadu Governor Ravi speech- இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாக, தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, தஞ்சயைில் நேற்று பேசினார்.;

Update: 2023-09-18 01:40 GMT

Tamil Nadu Governor Ravi speech- தமிழக கவர்னர் ரவி (கோப்பு படம்)

Tamil Nadu Governor Ravi speech, caste discrimination-தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்  இருப்பதாகத் கவலை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குச் சாதிய பாகுபாடு இங்கே அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவைச் சாப்பிட மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை இன்னும் தமிழழகத்தில் இருக்கிறது, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பது, குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகளைக் கலப்பது போன்ற கொடுமைகள் நடக்கின்றன. 

தமிழ்நாட்டில்தான் சாதிய பாகுபாடுகள் அதிகமாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிலவுவதாகவும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

தமிழக கவர்னர் ரவிக்கும், ஆளுங்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் இருப்பதாக, கவர்னர் ரவி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News