வழக்கு விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

Update: 2022-04-24 09:06 GMT
வழக்கு விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
  • whatsapp icon

அமைச்சர் ரகுபதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவரை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

''என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் புதுக்கோட்டை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அதிமுக ஆட்சியில் வேண்டுமென்றே கடந்த இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை என் மீது உள்ள வழக்குகளின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.''

''இரண்டு நீதிமன்றத்தால் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.''

மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் உச்சநீதிமன்ற நீதிபதி கலந்து கொண்ட விழாவில் நான் கலந்து கொண்டது தவறு இல்லை என்றார்.

Tags:    

Similar News