அரசு வேலை கிடைக்குமா? இதைக்கொஞ்சம் கவனிங்க..

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக இதுவரை மொத்தம் 75,88,359 பேர் காத்துக்கிடக்கின்றனர்.;

Update: 2022-03-29 04:15 GMT

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் மொத்தம் 75,88,359 பேர், அதாவது முக்கால் கோடி பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு ஆயிரங்களில் மட்டுமே வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதேபோல் மத்திய அரசு பணிகளிலும் ஆயிரக்கணக்கில் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.

இதற்கு மாற்றாக தமிழக அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாமையும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தி வேலைவாய்ப்பற்றோருக்கு உதவி செய்து வருகிறது. மேலும் சுயதொழில் செய்வதற்கான வழிகாட்டலையும் செய்து வருகிறது. இதுதவிர வேலைவாய்ப்பற்ற முதல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையும் வழங்கி வருகிறது.

வேலைக்காக 75 லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருக்கும் பட்சத்தில் சில லட்சகங்களில் மட்டுமே அரசு மற்றும் தனியார் வேலைகளில் சேர்கின்றனர். ஒருசிலர் மட்டுமே சுய தொழிலை நாடிச் செல்கின்றனர். ஆனால் அனைவருக்கும் வேலை என்பது கேள்விக்குரியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்ந நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசுவேலைக்காக காத்திருப்போரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 





Tags:    

Similar News