முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் விவாதத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.;
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என தெரிகிறது. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.