தமிழகத்தில் நாளை 60% பேருந்துகள் இயங்கும் - அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு
தமிழகத்தில் நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகள் இயக்கும், அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு -தொ.மு.ச. பொருளாளர் நடராஜன்;
இன்று காலை முதல் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கம் சார்பாக, வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக, சென்னை திருவல்லிக்கேனியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
'தமிழகத்தில் மத்திய அரசை கண்டித்து வெற்றிகரமாக முதல் நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, போராட்டத்தின் வடிவை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், நாளை 60 சதவிகிதம் வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை நடைபெற உள்ள முன்னணி நிர்வாகிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடவும், மற்ற தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம்' எனத் தெரிவித்தனர்.