சினிமாவுக்கு 'நோ'. இனி முழுநேர அரசியல்: உதயநிதி ஸ்டாலின்
மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம் என்று நடிகரும்,சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு தகவல்;
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மாமன்னன்' என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் நிறுவனத்தின் மூலம் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம். எனக்கு சினிமாவை விட அரசியலில் அதிக ஆர்வம் இருக்கிறது. அரசியலில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கிறது. அரசியலை இன்னும் அதிகம் கற்று கொள்ள வேண்டியிருப்பதால், அரசியலில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்