பெங்களூருவில் ஆட்டம் கண்ட காவலர் குடியிருப்பு

கடந்த மூன்று வாரங்களில், பெங்களூருவில் 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் இல்லை

Update: 2021-10-17 05:31 GMT

பெங்களூரு காவலர் குடியிருப்பு

பெங்களூருவில் பின்னி மில்ஸ் அருகே உள்ள காவலர் குடியிருப்பில், அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் சாய்ந்ததால் 32 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த குடியிருப்பு கட்டப்பட்டு மூன்று வருடம் தான் ஆகிறது. காவலர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்கள் இப்போது நகரின் நாகர்பாவி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னி மில்ஸுக்கு அருகிலுள்ள கட்டடம் சமீபத்தில் கட்டப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில், நகரத்தில் மூன்று கட்டடங்கள் இடிந்து விழுந்தன, மேலும் ஒன்று சாய்ந்ததால் இடிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக , இடிவதற்கு முன் சரியான நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

நகரில் பெய்த கனமழை காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுவதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில், பெங்களூருவில் 155 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட இரண்டு மடங்கு அதிகம்.

"300 க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்காக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அந்த வீடு உரிமையாளர்களுக்கு அவர்களின் வீடு பாதுகாப்பானது என்பதற்கான ஆதாரங்களை அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று பெங்களூரு நகர ஆணையர் தெரிவித்தார்.

பெங்களூருவில் பலவீனமான கட்டடங்களை அடையாளம் காணும் பணி இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது, ஆனால் செப்டம்பர் 27 அன்று வில்சன் கார்டனில் முதல் கட்டடம் இடிந்த பிறகு அது தீவிரப்படுத்தப்பட்டது. அந்த சம்பவத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 50 தொழிலாளர்கள் தப்பித்த திகிலூட்டும் வீடியோ படம் பிடிக்கப்பட்டது..

வில்சன் கார்டன் கட்டடம் இடிந்து ஒரு நாள் கழித்து, பால் வட்டத்தில் மற்றொரு கட்டடம்விழுந்தது. அதைத் தொடர்ந்து கஸ்தூரி நகரில் கட்டடம் இடிந்து விழுந்தது. கமலா நகரில் உள்ள ஒரு கட்டிடம் சாய்ந்ததால் இடிக்கப்பட்டது.

Tags:    

Similar News