நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: திருப்பூரில் நவ. 26ல் முழு அடைப்பு

நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் நவ. 26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-22 08:45 GMT

நூல் விலை உயர்வை கண்டித்து, வரும் 26,ம் ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று திருப்பூர்  ஏற்றுமதியாளர் சங்கம், பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டவற்றின்  அவசரக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  நூல் விலை உயர்வு தொடர்பாக, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் வரும் 26,ம் ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில் சங்கங்கள், அரசியல் கட்சியினர், இதற்கு  ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பருத்தி ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் பல ஆயிரம் பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை தரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 


Tags:    

Similar News