முதல்வர் வருகை: திருவாரூரில் ட்ரோன்கள் பறக்க தடை

திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிப் 22 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-02-20 09:05 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களையும் பார்வையிட்டு வருகிறார். அதேபோல் அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பிப். 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் 2 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனால் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து நாளை திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின், மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி கலந்துகொள்கிறார்.

அதனைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞா் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

Tags:    

Similar News