காளி படத்தின் பெண் இயக்குனரை கைது செய்யுங்கள்: நிலவேம்பு சித்தர் பாபுஜி சுவாமிகள் ஆவேசம்..!

காளி படத்தின் மூலம் இந்து தெய்வத்தை உட்சபட்ச இழிவுக்கு ஆளாக்கியுள்ளனர். குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என, கோவை நிலவேம்பு சித்தர் பாபுஜி சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2022-07-05 08:40 GMT

கோவை நிலவேம்பு சித்தர் பாபுஜி சுவாமிகள்.

விஷ்வ பிரம்ம ஜகத்குரு, கோவை நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தெரிவித்துள்ள கண்டனத்தில் கூறியுள்ளதாவது: தாய் காளிகாம்பாள் தமிழர்களின் வழிபாட்டுக் கடவுள். பண்டைய கால இதிகாசங்களில் போர்க்கடவுள். காவல் தெய்வமான கொற்றவை என்று அழைக்கப்படும் காளிதேவி வழிபாடு இந்துக்களால் ஒவ்வொரு அமாவாசை என்றும் அனைத்து ஆலயங்களிலும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் லீனா மணிமேகலை சமீபத்தில் தனது திரைப்படத்தின் போஸ்டரை சமூக தளத்தில் பகிர்ந்திருந்தார்.

இதில், தமிழர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டின் கடவுள் காளியின் வேடத்தில் ஒரு பெண் புகை பிடிக்கும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்னணியின் ஓரினப்பாலரின் அடையாளமான வானவில் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. சமீப காலமாக இந்து மத கடவுள்களை அவமானப்படுத்தும் விதமாக பலர் யூடியூப்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.

மத்திய, மாநில அரசுகள் கடவுள் மத வழிபாட்டு விஷயங்களை அவமதிக்கும் நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற செய்திகளில் கடவுள் மறுப்பாளர்கள் ஈடுபட்டு வந்தால் சன்னியாசிகள், சாதுக்கள் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியது வரும். இவ்வாறு, விஷ்வ பிரம்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கண்டித்துள்ளார்.

மேலும் இந்துக்களின் புனித தெய்வம் எங்கள் தாய் காளிகாம்பாள் சிகரெட் பிடிப்பது போல் காட்சியளிக்கும் இழிவு படுத்திய இந்த குறும்படத்தை தடை செய்ய வேண்டும். இப்படத்தை இயக்கிய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காளி படத்தின் மூலம் இந்து தெய்வத்தை உட்சபட்ச இழிவுக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த குறும்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோவை நிலவேம்பு சித்தர் பாபுஜி சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News