அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விடுமுறை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விடுமுறை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Update: 2024-01-21 03:44 GMT

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்)

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜன. 22ல் அதாவது நாளை  அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு  நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாளை  கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், பக்தர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.. 

திங்கட்கிழமை பகல் 12.20 மணிக்கு ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் அயோத்தியில் ரயில்கள், பேருந்துகள் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு சில நாட்களுக்குள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கே ஒவ்வொரு 100 மீட்டருக்கும் போலீஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

இப்படி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நாடே தயாராகி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திறப்பு விழாவிற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளன. அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் திங்கட்கிழமை ஜனவரி 22ல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News