மே 1 முதல் கட்டிட அனுமதிக்கு அலைய வேண்டாம் : ஒற்றைச்சாளர அனுமதி

கட்டடம் கட்ட அனுமதி வேண்டி நேரில் வர தேவையில்லை.உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையில் அனுமதி;

Update: 2022-04-20 07:15 GMT
மே 1 முதல் கட்டிட அனுமதிக்கு அலைய வேண்டாம் : ஒற்றைச்சாளர அனுமதி
  • whatsapp icon

மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை.

கட்டடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை.உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையிலே அனுமதி.முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒற்றைச்சாளர முறையில் அதுவும் தானியங்கி முறையில் கட்டட அனுமதியை பெறும் முறை, வரும் 1ம் தேதி முதல் அமலாகவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் ஒற்றைச்சாளர திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News