'சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம்' பா.ம.க. அறிவிப்பால் மீண்டும் சர்ச்சை

'சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம்' பரிசு வழங்கப்படும் என்ற பா.ம.க. அறிவிப்பால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-14 12:19 GMT

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்ககோரி மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் போலீஸ் எஸ்.பி.யிடம் மனு கொடுக்க வந்தனர்.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்துள்ள

ஜெய் பீம் திரைப்படம் ஓ.டி.டி.யில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் மறைந்த வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை

ஒரு கதா பாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா

சிங்கிடம் பா.ம.க.மாவட்ட செயலாளர்சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில்பா

.ம.க.வினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுஅளித்தனர்.

அதில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில்

திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மைபெயரை சூட்டிவிட்

டுவேண்டுமென்றே வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக அப்பட

த்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் எங்கள் குலத்தின் அடை

யாளமான அக்னிகுண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர்

காடுவெட்டி குரு பெயரை அந்த வில்லனுக்கு வைத்தும், அவரது புகழுக்கும்

கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய

மக்களுடன் இணக்கமாக பழகி வரும் வேளையில் தாழ்த்தப்பட்ட

பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள்

செயல்படுவது போல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவது போல் பட

த்தை எடுத்துள்ளனர்.

எனவே ஜெய்பீம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர்

ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்குபா.ம.க.வினர் வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் போஸ்டரை

மாற்றி ஒட்டியது. திரையரங்கிற்கு வந்த பா.ம.க.வினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஓடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது.

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பா.ம.க.வினர் முழக்கமிட்டு சூர்யாவின் போஸ்டரை

கிழித்தனர். இதனால் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வெளியேறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் பழனிச்சாமி

ஜாதிகலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய

நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவை தாக்கும் இளைஞர்

களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரசு அளிக்கப்ப

டும் பரிசு அளிக்கப்படும் என்றும், இந்த மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் எந்த பட

த்தையும் திரையிடுவதற்கு பா.ம.க. அனுமதிக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மயிலாடுதுறை பா.ம.க. அறிவிப்பால் ஜெய்பீம் படம் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News