நரிக்குறவர் இன மாணவிகளுக்கு உதவி -முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

நரிக்குறவர் இன மாணவிகளுக்கு உதவி அளிப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Update: 2022-03-16 12:47 GMT

நரிக்குறவர் இன மாணவிகள் இன்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா தர்ஷினி ஆகியோர் தங்களுக்கு உதவிகள் கோரி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவியது.

இந்த நிலையில் அந்த மாணவிகள் இருவரும் இன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சென்னையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது  அந்த மாணவிகளிடம்  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக  உறுதி அளித்தார்.

இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.

Tags:    

Similar News