மாட்டுப்பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல தமிழில் இத்தனை வார்த்தைகளா?
Happy Mattu Pongal Wishes in Tamil-மாட்டுப்பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல தமிழில் உள்ள வார்த்தைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Happy Mattu Pongal Wishes in Tamil
தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகைக்கும் இன்னும் 3 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். தைப்பொங்கலுக்கு நிகராக மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நகரங்களை விட கிராமங்களில் தான் மாட்டுப்பொங்கல் இன்று வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காரணம் கிராமப்புற தமிழர்களின் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி உள்ளது. இந்த இயற்கை வாழ்க்கையில் கால்நடைகள் மனிதனுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆடு,மாடு, கோழி, நாய், பூனை என பல வகையான கால்நடைகள் இருந்தாலும் பசு, காளை ஆகிய இந்த இரண்டும் தான் மனிதனுக்கு தோழனாக தோழியாக விளங்குகின்றன.
பசு பால் தருகிறது.இதன் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் உயருகிறது. காளை உழவில் தொடங்கி வண்டி இழுப்பது, பாரம் சுமப்பது என அனைத்து உதவிகளையும் செய்வதோடு இனப்பெருக்கத்திற்கான காரணியாகவும் உள்ளது. வீரமான ஜல்லிக்கட்டு காளைகள் தமிழர்களின் வீரத்தை அகிலத்திற்கே பறை சாற்றுகிறது.
அந்த வகையில் மாட்டுப்பொங்கல் தினத்தன்று இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கையின் ஒரு அங்கமான பசுக்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய நேரம் இது. அவை விவசாயம் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன.
மாட்டுப் பொங்கலன்று, மக்கள் தங்கள் மாடுகளை அலங்கரித்து, கௌரவிப்பதோடு, கோலம் (ரங்கோலி) வரைதல் மற்றும் காளைகளை அடக்குதல் போன்ற பல்வேறு பாரம்பரிய நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
இனி மாட்டுப்பொங்கல் தினத்தன்று உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழி் அனுப்ப வேண்டிய வாழ்த்து செய்திகளை பார்ப்போமா?
*வீரத்தின் அடையாளமாக, உழவனின் தோழனாக, ஏழைகளின் தெய்வமாக, விளங்கும் மாடுகளின் பண்டிகையாம்மாட்டு பொங்கலைமகிழ்வுடன் கொண்டாடுவோம்,மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
*நமக்கு பால் கொடுத்து, உழுவதற்கு வலிமை கொடுத்து, வறுமையில் நம் தோளோடு தோள் நிற்கும் பசு மற்றும் காளைகளுக்கு நாம் நன்றி கூறும் திருநாள்.
*மணிகள் கட்டி அலங்கரித்து போற்றுவோம் நம் உடன்பிறவா சொந்தங்களை. இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
*உழவனின் தோழனுக்கு நன்றி சொல்லும் நன்நாள், பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல், அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*விவசாயத்தின் தோழனாய், உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம். இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்.
*இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்... உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்.
*அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
*வீரத்தமிழருக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
*ஜல்லிக்கட்டு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2