நீட் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை

2023ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பிற்கான நீட் இளங்கலை தேர்விற்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Update: 2023-03-06 14:15 GMT

பைல் படம்.

2019ம் ஆண்டு தேசிய மருத்துவ வாரிய சட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்திய அரசின், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தி வருகிறது.

2023ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஜனவரி – பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான விண்ணப்ப படிவங்கள் இணையத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபட்டது. ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் நீட் தேர்வு விண்ணப்பம் தொடர்பான அறிவிப்புகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தது. அதன்படி எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நீட் இளங்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளநிலை நீட் தேர்வு மே மாதம் 7ம் தேதி நடைபெறும்.

Tags:    

Similar News