16 ம் தேதி வரை நீலகிரி பயணத்தை தவிர்க்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்கள் அச்சபட தேவையில்லை என்றும் அவசர தேவைக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் தெரித்துள்ளார்.;

Update: 2021-11-12 16:00 GMT

நீலகிரியில் கனமழையால் ஸ்தம்பித்து நிற்கும் கார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் வரும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதை அடுத்து 12 ம் தேதி முதல் 16 வரை நீலகிரி பயணத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார். கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 42 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 456 தற்காலிக முகாம்கள் தயாராக வைக்கபட்டுள்ளன.

கன மழையால் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாகவும், அதில் 22 இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக கண்டறியபட்டுள்ளது. அந்த 22 இடங்களிலும் தாசில்தார் தலைமையில் குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அபாயகரமான மரங்கள் தொடர்ந்து வெட்டபட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சபட தேவையில்லை என்றும் அவசர தேவைக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் நீலகிரி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரித்துள்ளார்.

Tags:    

Similar News