அண்ணா பல்கலை இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு
அண்ணா பல்கலை முதலாமாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'கட் ஆப்' தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. வரும், 17ம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது.
இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூலை 26ல் துவங்கி ஆகஸ்ட் 24ல் முடிந்தது. கட்டணம் செலுத்தியவர்களின் அசல் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, அரசு தேர்வு துறை வழியாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் எடுத்த பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி தரவரிசை பட்டியல் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தரவரிசை பட்டியலுடன்சேர்த்து, மாணவர்களின் ஜாதி வாரியான மற்றும் சிறப்பு தகுதி ஒதுக்கீடுகள் அடிப்படையில், கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. எந்த கட் ஆப் மாணவர்கள், எந்த நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்; ஆன்லைன் வழி கல்லுாரி விருப்ப பதிவு எப்போது என்ற விபரங்களும் நாளை வெளியிடப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.