முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadass Meets CM Stalin பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Anbumani Ramadass Meets CM Stalin பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான் இந்த பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருந்தது. அதன்படி இந்த சிறப்பு பொதுக்குழு பா.ம.க.வின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்தது.
இந்நிலையில், பாமக புதிய தலைவராக தேர்வாகியுள்ள அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Anbumani Ramadass Meets CM Stalin சந்திப்பிற்கு பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, இதில் அரசியல் எதுவும் பேசவில்லை. புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு என்னை மனதார வாழ்த்தினார். முதலமைச்சரை சந்தித்து தடுப்பணைகள் கட்டுவது குறித்த திட்டத்தை வலியுறுத்தினேன். கால நிலை மாற்றம் குறித்து தொலைநோக்கு பார்வையை முன்வைத்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த 30-40 ஆண்டுகளில் சரி செய்ய முடியும் என்று கூறியதாக தெரிவித்தார்