நக்கீரன் ஆசிரியருக்கு 'அமைதிக்கான தூதர்' சர்வதேச விருது..!

Update: 2022-03-30 03:43 GMT

இலண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "பீஸ் ஃபெடரேஷன்" என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் ஆண்டுத் தோறும் அமைதிக்கான தூதர் என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இந்த விருதுக்கு நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், துணிச்சலான முயற்சிகளை மேற்கொண்டு அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்தியதற்காக நக்கீரன் ஆசிரியர்' கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 23/2022 அன்று இலண்டனில் நடைபெற்ற விழாவில்" பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ரீதா பெய்ன், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு அமைதிக்கான தூதர் விருது" வழங்கினார். சர்வதேச விருதினை பெற்று தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கு பெருமை சேர்த்துள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும், நக்கீரன் குழுமத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News